» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் ஏடிஎம் தீப்பிடித்து எரிந்து விபத்து : பணம் பத்திரமாக மீட்பு

வெள்ளி 24, ஜூலை 2020 12:32:35 PM (IST)திருநெல்வேலியில் ஏடிஎம் இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய உள் நுழைவாயில் பகுதிகளில் இந்தியன் வங்கி ஏடிஎம் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த ஏடிஎம் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. தீ மளமளவென பரவி ஏடிஎம் அறை முழுவதும் பரவியதால் கரும்புகை வருவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் . இதனையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர் . 

இருப்பினும் ஏடிஎம் இயந்திரம் , ஏடிஎம் இருந்த அறை ஆகியவை தீ விபத்தில் முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் ஏடிஎம்மில் இருந்த பணத்திற்கு எந்த சேதமும் இல்லை என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory