» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி அருகே உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி : முதல்வர் அறிவிப்பு

சனி 25, ஜூலை 2020 5:35:54 PM (IST)

தென்காசி அருகே வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு நிவாரணம் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த வாகைகுளத்தைச் சேர்ந்த அணைக்கரை முத்து (76) என்பவர் வீட்டின் பின் பகுதியில் சுமார் 2½ ஏக்கரில் தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரங்களில் தோட்டத்தில் காட்டுபன்றிகள் வருவதால் தோட்டத்தை சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து, கடையம் வன சரக அதிகாரிகள் அணைக்கரை முத்துவை விசாரணைக்கு வனசரக அலுவலகத்திறக்கு அழைத்து சென்ற நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்ததாக தெரிகிறது.

ஆனால் உறவினர்கள், வனத்துறையினர் தாக்கியதால்தான் அணைக்கரை முத்து உயிரிழந்ததாக கூறி அவரது உடலை வாங்க மறுத்தும், சம்மந்தப்பட்ட வனத்துறையினர் மீது கொலை வழக்கை பதிவு செய்யவும், ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்கவும் மேலும் , முத்து குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் 3 வது நாளாக உறவினர்களும், பொதுமக்களும் போராட்டம் செய்து வந்தனர். இந்நிலையில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு நிவாரண நிதியா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory