» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விவசாயி உயிரிழந்த சம்பவம் : பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 28, ஜூலை 2020 12:20:58 PM (IST)

தென்காசி அருகே விவசாயி அணைக்கரை முத்து  உயிரிழந்த சம்பவத்தில் அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைக் குளத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து (72). இவர் தனது தோட்டத்தில் அனுமதியின்றி மின்வேலி அமைத்ததையடுத்து வனத்துறையினர் ஜூலை 22 இரவு அணைக்கரை முத்துவை விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில் திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதையடுத்து வனத்துறை தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆழ்வார்குறிச்சி காவல் துறையினர் அணைக்கரை முத்து மகன் நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நீதிபதி விசாரணைக்குப் பரிந்துரை செய்தனர். இறந்தவர் உடலை வாங்க மறுத்து இன்று 6வது நாளாக அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அணைக்கரை முத்து மனைவி பாலம்மாள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மறு பிரேதப் பரிசோதனை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு விண்ணப்பித்திருந்தார். அதற்கான விசாரணை இன்று காலை நடைபெற்றது. 

விசாரணையின் போது , அணைக்கரைமுத்துவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. மேலும் அணைக்கரை முத்துவின் உடலை விதிகளை மீறி இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன்?மாலை 4 மணிக்கு மேல் உடற்கூராய்வு செய்யக்கூடாது என விதி உள்ள நிலையில் இரவில் அவசரமாக உடற்கூராய்வு செய்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory