» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி விவசாயி உடல் மறு பிரேத பரிசோதனை : உயர்நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 30, ஜூலை 2020 11:08:27 AM (IST)

தென்காசியில் வனத்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த விவசாயி அணைக்கரை முத்து உடலில் நான்கு இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவரது உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்காசி வாகைகுளத்தைச் சேர்ந்தவர் விவசாயி அணைக்கரை முத்து. இவர் தோட்டத்தில் மின் வேலி அமைத்துள்ளார். இது தொடர்பாக வனத்துறையினர் அணைக்கரை முத்துவை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவர் உயிரிழந்தார்.இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அணைக்கரைமுத்து மனைவி பாலம்மாள் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் உயிரிழந்த விவசாயி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மறு பிரேத பரிசாேதனை செய்ய சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும் இந்த குழுவில் நெல்லை, மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளை சேர்ந்த தடய அறிவியல் துறை தலைவர்கள் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory