» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் கரோனாவால் அரசு டாக்டர் உயிரிழப்பு

வெள்ளி 31, ஜூலை 2020 8:39:12 AM (IST)

தூத்துக்குடியில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த டாக்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி போல்பேட்டை 2வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் கல்யாணராமன் (58). இவர் சாயர்புரம் அருகே பண்டாரவிளை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 28ஆம் தேதி இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு பரிசோதனை எடுக்கப்பட்டதில் இவருக்கு கரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோன்று தூத்துக்குடியை சேர்ந்த 82 வயது முதியவர், தூத்துக்குடி நடராஜபுரத்தை சேர்ந்த 52 வயது ஆண், ஆண்டாள் தெருவை சேர்ந்த 77 வயது முதியவர் ஆகியோரும் கரோனா தொற்று காரணமாக இறந்து உள்ளனர். மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியாகி உள்ளனர்.  இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 220 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 812 ஆக அதிகரித்து உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 494 ஆக உயர்ந்து உள்ளது. 2 ஆயிரத்து 275 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மக்கள் கருத்து

ராமர்Jul 31, 2020 - 12:13:11 PM | Posted IP 162.1*****

அரசு மருத்துவர் மட்டுமின்றி மற்ற தனியார் மருத்துவர்களுக்கும் உரிய மரியாதையை இந்நேரத்தில் மக்கள் கொடுக்கவும்

JOSEPH KANAGARAJJul 31, 2020 - 11:22:00 AM | Posted IP 162.1*****

தன்னலம் கருதாது மக்களின் நலன் கருதி பணிபுரிந்த உன்னதமான மருத்துவரை காலன் நம்மிடம் இருந்து பிரித்துவிட்டான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory