» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பிளஸ் 1 தேர்வு : ஆக்ஸ்போர்டு பள்ளி 100 சதவீத தேர்ச்சி

வெள்ளி 31, ஜூலை 2020 6:46:10 PM (IST)


தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 தேர்வில் 100  சதவீத தேர்ச்சி  பெற்றது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 தேர்வு எழுதிய 98 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவி ஷிவாணி 600க்கு 586 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-99, ஆங்கிலம்-95, இயற்பியல்-99, வேதியியல்-99, உயிரியல்-95, கணிதம்-99. இவர் 97.66 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.இப்பள்ளி மாணவி மகாலெட்சுமி 569 மதிப்பெண்கள் பெற்று பள்ளி இரண்டாமிடம் பெற்றார். இவர் தமிழ்-99, ஆங்கிலம்-90, இயற்பியல்-94, வேதியியல்-95, உயிரியல்-92, கணிதம்-99 என மதிப்பெண்கள் பெற்றார். இவர் 94.83 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இப்பள்ளி மாணவர் சூர்யா 566 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மூன்றாமிடம் பெற்றார். இவர் வணிக கணிதத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார். இவர் 94.33 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இப்பள்ளியில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 29 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். பள்ளியில் சராசரி மதிப்பெண் 74.6 சதவீதம் ஆகும். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் மிராக்ளின் பால் சுசி, நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன், தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory