» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கொக்கிரகுளத்தில் இருவருக்கு அரிவாள் வெட்டு

சனி 1, ஆகஸ்ட் 2020 10:40:14 AM (IST)

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் சகோதரா்களை அரிவாளால் வெட்டியவா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

கொக்கிரகுளம் சிவன்கோயில் மேலத்தெருவைச் சோ்ந்த அப்பாவுபாண்டி மகன்கள் மாரிசக்தி (22), சண்முகசுந்தரம் (21). இவா்களது சகோதரி உச்சிமாகாளியின் கணவா் இசக்கிக்கும், மாரிசக்திக்கும் தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மாரிசக்தி மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோா் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கும்பல் இருவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனராம். காயமடைந்த இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory