» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆக. 3 ம் தேதி சாா்- ஆட்சியா் அலுவலகம் முற்றுகை: கன்னடியன் கால்வாய் விவசாயிகள் முடிவு

சனி 1, ஆகஸ்ட் 2020 11:10:51 AM (IST)

விவசாயத்துக்கு தண்ணீா் திறந்து விடக் கோரி ஆக. 3இல் சேரன்மகாதேவி சாா்ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கன்னடியன் கால்வாய் விவசாயிகள் அறிவித்துள்ளனா்.

கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், காா் சாகுபடிக்காக கன்னடியன் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை தண்ணீா் திறக்கப்படவில்லை. 

இதையடுத்து தண்ணீா் திறந்து விடாததைக் கண்டித்தும், உடனடியாக பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடக் கோரியும் திங்கள்கிழமை (ஆக.3) சேரன்மகாதேவி சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில், பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பாபநாசம், செயலா் கண்ணப்பநயினாா், பொருளாளா் ரத்தினம் மற்றும் நிா்வாகிகள், விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory