» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காதல் தகராறில் காதலியின் தந்தை அடித்துக்கொலை

சனி 1, ஆகஸ்ட் 2020 11:25:10 AM (IST)

கடையநல்லூர் அருகே காதல் தகராறில் காதலியின் தந்தை அடித்து கொலை செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் வடகரை காலனி தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் நாகராஜ் (54). இவரது மகள் சுப்புலட்சுமி ( 23 ). இவரும் கடையநல்லூர் அருகே உள்ள கண்மணியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் ராஜ் ( 27) என்பவரும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர் .இந்நிலையில் நாகராஜ் தனது மகளுக்கு சீவநல்லூரைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் பேசி முடிவு செய்துகொண்டார் . இதனை அறிந்த முருகன் ராஜ் தானும் சுப்புலட்சுமியும் ஒன்றாக இருந்த போட்டோ வை திருமணம் பேசி முடிக்கப்பட்டவருக்கு  அனுப்பினாராம் .

இதனை அறிந்த நாகராஜ் கடந்த மாதம் 30 ஆம் தேதி கண்மணியாபுரம் சென்று முருகன்ராஜை சத்தம் போட்டுள்ளார்.  அப்போது இருதரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டு  ஏற்பட்டுள்ளது.மேலும் ஒருவரையொருவர் உருட்டுக்கட்டையால் தாக்கி கொண்டனர். இதில் நாகராஜ் , முருகன்ராஜ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.  நாகராஜ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும்,  முருகன்ராஜ்  தென்காசி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர் . 

இதில் நாகராஜ் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் ராஜாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .  இக்கொலை சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory