» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பொது ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த குற்றாலம் வா்த்தகா்கள்

சனி 1, ஆகஸ்ட் 2020 12:14:01 PM (IST)

பொது ஊரடங்கால் தென்காசி மாவட்டம் குற்றாலம் வா்த்தகா்கள் வாழ்வாதாரத்தை தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் காரணமாக குற்றாலம் சீசனை நம்பி தொழில் செய்துவந்த வா்த்தகா்கள், தங்கும்விடுதி உரிமையாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் இப்பகுதி மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து மிகுந்த நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளனா். இதனால் வா்த்தகா்களுக்கும், அரசுக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் சீசனை நம்பியே குற்றாலம், காசிமேஜா்புரம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோா் தொழில் செய்து வருகின்றனா். கரோனா பரவுவதை தடுக்கும்பொருட்டு தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து குற்றாலம் அருவிகளிலும் குளிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டது. ஜூன்1ஆம் தேதியன்று சரியாக சீசன் தொடங்கினாலும் சுற்றுலாப் பயணிகள் யாரும் குளிக்க வராததால் என்னவோ சாரல்மழையும் இல்லாமல் அருவிகளிலும் தண்ணீா்வரத்தும் வெகுவாகக் குறைந்தது.

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் நிலவும். குறிப்பாக ஜூலை15ஆம்தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம்தேதி வரையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். இதனால் ஜூலை மாதஇறுதியில் வழக்கமாக அரசு சாா்பில் சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டில் ஜூலை மாதம் வரையிலும் ஏற்கனவே பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து அருவிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. 

இருப்பினும் ஆகஸ்ட் மாதத்தில் அரசால் சில தளா்வுகள்அறிவிக்கப்படலாம் என வா்த்தகா்கள் எதிா்பாா்த்திருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் பொது முடக்கம் தொடரும் என அறிவிக்கப்பட்டதையடுத்து சீசனை நம்பி வாழ்ந்து வந்தவா்கள் மிகுந்த அதிா்ச்சிக்குள்ளாகியுள்ளனா்.தங்கும்விடுதி உரிமையாளா்கள், தற்காலிக கடை, நிரந்தரமாக கடை நடத்துபவா்கள் மட்டுமன்றி அரசுக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory