» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தற்கொலை செய்த ஆசிரியை உறவினருக்கு கத்திக்குத்து : கணவர் கைது

சனி 1, ஆகஸ்ட் 2020 5:42:38 PM (IST)

மாடத்தட்டுவிளை பகுதியில் தற்கொலை செய்த ஆசிரியையின் உறவினருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக ஆசிரியை கணவர் கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண்பால் (37). இவருடைய மனைவி வனஜா ரோஸ் (33). கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு குழந்தை இல்லை. குழந்தை இல்லாததால், ஜாண்பாலின் தம்பி பிள்ளையை அவர்கள் வளர்த்து வந்துள்ளனர். வனஜாரோஸ் தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று விஷ மாத்திரை தின்று வனஜாரோஸ் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே தற்கொலை செய்த வனஜாரோஸின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊரில் அடக்கம் செய்ய கொண்டு வரப்பட்டது.

மாடத்தட்டுவிளை பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் ஆசிரியையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி சடங்கு நிகழ்ச்சியில் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, தற்கொலை செய்த ஆசிரியையின் உறவினரான எட்டாமடை பகுதியை சேர்ந்த ஜெனிஸ் (27) என்பவர் ஜாண்பாலிடம் தகராறு செய்து குற்றம் சாட்டினாராஇதனால் ஆத்திரமடைந்த ஜாண்பால் திடீரென தான் வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெனிஸை குத்தி விட்டார். இதில் அவர் படுகாயமடைந்தார். இதுபற்றி உடனடியாக இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த ஜெனிஸை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாண்பாலை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory