» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலம் ஐந்தருவியில் காட்டுப்பன்றி விழுந்து பலி : சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்!!

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 1:09:08 PM (IST)


குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது நேற்று இரவு ஐந்தருவியில் வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட காட்டுப்பன்றி அருவியில் மேலிருந்து விழுந்து பலியானது.

குற்றாலம் மலைப்பகுதியில் நேற்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் ஐந்தருவியில்  ஒரு காட்டுப்பன்றியை  வெள்ளம் இழுத்து வந்துள்ளது. வெள்ளம் அதிகமாக இருந்ததால் காட்டுப்பன்றி  கரையேற முடியாமல் வெள்ளத்தில் அடித்து வந்த நிலையில் அருவியில் மேலிருந்து கீழே விழுந்துள்ளது. இதனால் முகத்தில் தாடை பகுதியில் பெரும் சிதைவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அருவிக்கரை பகுதியிலேயே பலியானது.

கொரோனா வைரஸ் பரவலால் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அருவிப் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்லவில்லை. இதனால் இன்று காலையில் அருவிக்கு பாதுகாப்புக்கு சென்ற போலீசார் அருவிக்கரையில் காட்டுப்பன்றி இறந்து கிடப்பதை அறிந்து உடனடியாக குற்றாலம் வனத்துறை அதிகாரிகளுக்கு  தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் வனச்சரக அலுவலர் பாலகிருஷ்ணன்,  குற்றாலம் பாரஸ்ட் வனவர் அழகர்ராஜ், வனக்காப்பாளர் சசிகுமார் மற்றும்  வனவர் அருள்ராஜ், வனக்காவலர் வனராஜ், வேட்டை தடுப்பு காவலர் செண்பகம், ஆகியோர் ஐந்தருவி பகுதிக்கு விரைந்து வந்து அருவிப் பகுதியில் உயிரிழந்த நிலையில் கிடந்த காட்டுப்பன்றியை எடுத்துச்சென்றனர் அதனை கால்நடை மருத்துவர்  டாக்டர் சசிகுமார்  உடற்கூறு ஆய்வு நடத்தினார். அதனைத் தொடர்ந்து அந்த காட்டுப்பன்றியை வனப்பகுதிக்குள்  கொண்டு சென்று அடக்கம் செய்தனர் பலியான காட்டுப்பன்றிக்கு  சுமார் எட்டு வயது இருக்கலாம் என்றும் 100 கிலோ எடை உள்ளது என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரானா ஊரடங்கு காரணமாக ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

திங்கள் 21, செப்டம்பர் 2020 6:02:53 PM (IST)

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory