» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென் மாவட்டங்களில் புதிய பீதி : கொரோனா சந்தேகத்தில் இறப்பவர்கள் அதிகரிப்பு!

புதன் 5, ஆகஸ்ட் 2020 5:15:00 PM (IST)

தென் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பேரில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மூன்று மாவட்டங்களில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்து விட்டது. இதற்கிடையே கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்யும்போது சில நேரங்களில் நெகட்டிவ் என ரிசல்ட் வருகிறது. ஆயினும் அந்த நபர்களுக்கு பாதிப்பு வேகமாக அதிகரிக்கிறது. இது போன்ற நிலையில் இருப்பவர்கள் சமீப நாட்களாக அதிக அளவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். 

குறிப்பாக 55 வயதை கடந்தவர்களுக்கு வேறு சில உடல் உபாதைகள் இருக்கும் நிலையில் மூச்சுத் திணறல் போன்ற பிரச்னை தொடர்ந்து ஏற்படுகிறது. இதுபோன்ற பாதிப்புள்ள நபர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் போது, கொரோனா சந்தேகம் (சஸ்பெக்ட் கொரோனா) என்ற பட்டியலில் சேர்த்து சிகிச்சையளிக்கின்றனர்.

இந்த நிலையில் இருப்பவர்களுக்கு செயற்கை சுவாச உதவி தேவைப்படுகிறது. அந்த நிலையில் சிகிச்சை பெறும் பலர் ஒரளவு மீண்டு வருகின்றனர். ஆயினும் இந்த நிலையில் உள்ளவர்களும் சில நேரங்களில் உயிரிழப்புக்கு ஆளாகின்றனர். கொரோனா சந்தேக பட்டியலில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. 

இவ்வாறு உயிரிழப்பவர்களை, கொரோனா நோயாளிகளை அடக்கம் செய்வதற்கு தெரிவிக்கப்படும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறு உறவினர்களை அறிவுறுத்தி உடல்கள் முழுமையாக மூடப்பட்டு ஒப்படைக் கப்படுகின்றன. அவர்கள் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் உடல் அடக்கம் செய்கின்றனர். இவ்வாறு கொரோனா சந்தேகத்தின் பேரில் இறப்பவர்கள் பட்டியல், கொரோனாவால் இறந்தவர்களின் பட்டியலில் இடம் பெறுவதில்லை. 

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று மட்டும் ஏர்வாடி, வி.கே.புரம், கடையநல்லூர் உள்ளிட்ட 4 பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்துள்ளனர். கொரோனா சந்தேக உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் பொது மக்களிடையே மேலும் அச்சம் அதிகரித்துள்ளது.

 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory