» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விவசாயி அடித்துக்கொலை : கணவன் கைது ; மனைவி, 2 மகள்களுக்கு வலை!

புதன் 5, ஆகஸ்ட் 2020 5:36:56 PM (IST)

சங்கரன்கோவில் அருகே குடிநீர் பிடித்த தகராறில் தாக்கப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி பலியானதை தொடர்ந்து கணவன் கைது செய்யப்பட்டதுடன், அவரது மனைவி மற்றும் இரு மகள்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பால்சாமி மகன் காளிமுத்து(60) விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ற பவுன்ராஜ்(50) என்பவருக்கும் இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் காளிமுத்து அங்குள்ள பொது குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது ஆறுமுகம் என்ற பவுன்ராஜுக்கு ஆதரவாக அவரது மனைவி சமுத்திரகனி மற்றும் மகள்கள் ஜெய சூர்யா, நந்தினி ஆகியோர் காளிமுத்துவை அவதூறாக பேசி தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர். 

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த காளிமுத்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் டவுன் போலீசார், கொலை முயற்சி வழக்குபதிவு செய்து காளிமுத்துவை கைது செய்தனர். இதனிடையே படுகாயம் அடைந்த காளிமுத்து மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து டவுன் போலீசார், கொலை வழக்காக பதிவு செய்தனர். ஆறுமுகம் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி மற்றும் 2 மகள்களை போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory