» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட எதிர்ப்பு : தென்காசியில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

புதன் 5, ஆகஸ்ட் 2020 6:09:03 PM (IST)அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் உட்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் தென்காசி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. 

மத்திய அரசு ராமர் கோயில் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியிறுத்தியும், காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்கி அங்கு நடக்கும் அத்துமீறலை நிறுத்த வேண்டும், இணையம் தொலைத் தொடர்பு தடையை நீக்க வேண்டும், சிறையிலடைக்கப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக நாடு தழுவிய அளவில் அறவழி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதன்படி தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் சீனா, சேனா சர்தார்  தலைமையில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் பாதுஷா, நகர துணைச்செயலாளர் பீர் முஹம்மது, நகர ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ஃப்ரண்ட் நெல்லை மண்டல தலைவர் திப்பு சுல்தான், மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் ஆகியோர் கலந்து கொண்டனர். கடையநல்லூர், புளியங்குடி, வடகரை  ஆகிய இடங்களிலும் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

திங்கள் 21, செப்டம்பர் 2020 6:02:53 PM (IST)

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory