» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆடு திருடும் முயற்சியில் வாலிபர் வெட்டிக் கொலை : மற்றொருவர் படுகாயம்!

புதன் 5, ஆகஸ்ட் 2020 6:39:27 PM (IST)

ஆலங்குளம் அருகே ஆடு திருடும் முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வீரகேரளம்புதுார் பக்கமுள்ள தாச்சியார்புரத்தில் பாண்டித்துரை என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு தூரத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்த சண்முகையா மகன் அய்யனார்(40) என்பவர் ஆட்டுக்கிடை அமைத்துள்ளார். நேற்றிரவு ஆட்டுக்கிடை காவலுக்காக அய்யனார் அங்கேயே படுத்து தூங்கினார். நள்ளிரவில் ஆலங்குளம் நெட்டூரை சேர்ந்த 6 பேர் கும்பல், இரண்டு பைக்குகளில் தோட்டத்திற்கு சென்றனர்.

அப்போது கிடையில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் திடீரென அச்சத்தில் சப்தமிட்டன. இதையடுத்து அய்யனார் எழுத்து வந்து பார்த்த போது 6 பேர் கும்பல், ஆடுகளை திருட முயற்சி செய்துகொண்டிருந்தனர். இதையடுத்து அவர் அந்த 5 பேரிடமும் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அய்யனார். அதே பகுதியில் வசித்துவரும் கிடாரக்குளத்தைசேர்ந்த பட்டன் என்பவருக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கவே பட்டன் மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 4 பேர் அங்கு வந்தனர். இதையடுத்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. கம்பு மற்றும் அரிவாளால் மோதிக் கொண்டனர்.

இந்த சம்பவத்தில் ஆலங்குளம் நெட்டூரை சேர்ந்த முத்துப்பாண்டி என்ற விஜய்(24), மற்றும் முருகன் மகன் பார்த்தீபன் (25) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வி.கேபுதூர் போலீசார், சம்பவ இடம் சென்று காயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த வெட்டுக் காயங்கள் அடைத்த முத்துப்பாண்டி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். பார்த்தீபனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொலையான முத்துப்பாண்டிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.  இந்த சம்பவம் தொடர்பாக சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory