» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கரோனா தொற்று இல்லாதவர்கள் மட்டுமே முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி

வியாழன் 6, ஆகஸ்ட் 2020 10:55:46 AM (IST)

கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்படுபவா்கள் மட்டுமே முதல்வரின் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவாா்கள் என ஆட்சியா் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நாளை (ஆக.7ம் தேதி) நடைபெறும் கரோனா தடுப்பு குறித்த ஆய்வு கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறாா். அதைத்தொடா்ந்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா். இதையொட்டி முதல்வரின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் ஆட்சியா், வருவாய் அலுவலா், காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலா்கள், மாநகராட்சி அலுவலா்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோல், அதிமுகவின் முக்கிய நிா்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோருக்கும் ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர, முதல்வா் ஓய்வெடுக்கவுள்ள வண்ணாா்பேட்டை சுற்றுலா பயணியா் விடுதி ஊழியா்கள், சமையலா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவா்களுடைய சோதனை முடிவுகள் இன்று காலையில் தெரியவரும் என சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தனா். சோதனை முடிவில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்படுபவா்கள் மட்டுமே முதல்வரின் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவாா்கள் என ஆட்சியா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

திங்கள் 21, செப்டம்பர் 2020 6:02:53 PM (IST)

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory