» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தேவிபட்டணத்தில் பலத்த சூறாவளி காற்று! பயிர்கள் சேதம் - நஷ்டஈடு வழங்க கோரிக்கை!

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 5:08:55 PM (IST)
தென்காசி மாவட்டம் தேவிபட்டணம் பகுதியில் பலத்த சூறாவளி காற்று காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவிபட்டணம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், சின்னாடப்பேரி, விஸ்வலிங்கபேரி, வழிவழிகுளம் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தென்னை, மா, வாழை, கொய்யா உள்ளிட்டவைகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ள. தற்போது தொடர் சாரல் மழை காரணமாக இப்பகுதிகளில் அடிக்கடி காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. திடீரென இப்பகுதியில் ஏற்பட்ட சூறாவளி காற்றின் காரணமாக இப்பகுதிகளில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் மின்கம்பங்கள் சேதமாகி கீழே விழுந்தன. இதனால் இப்பகுதியில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள பணபல மரங்கள் சேதமாகி இருப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் பயிரிடப்பட்ட கரும்புகளும் சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மின் கம்பங்கள் சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

தேவிபட்டணம் ஊருக்குள் மின்வினியோகம் சீர் செய்யப்பட்டது. விவசாய பகுதிகளில் மட்டும் தொடர் மழை காரணமாக மின்கம்பங்கள் சீரமைப்பு பணி காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. சூறாவளி காற்றினால் சேதமான விவசாய பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் இதே போன்று கன மழை, சூறாவளி காற்றில் விவசாய பயிர்கள் சேதம் ஏற்பட்தற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அக்கோரிக்கையை ஏற்ற அரசு ஒரு சில விவசாயிகளுக்கு மட்டும் நஷ்டஈடு வழங்கி விட்டு மற்றவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. தற்போது அதுபோல் இல்லாமல் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நஷ்ட  ஈடுவழங்க வேண்டும் என விவசாயி பூமிநாதன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory