» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆடு திருடும் முயற்சியில் வாலிபர் கொலை : தந்தை-மகன்கள் உள்பட 4 பேர் கைது

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 6:20:39 PM (IST)

சுரண்டை அருகே ஆடு திருடும் முயன்ற வாலிபர் கொலையில் தந்தை-மகன்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 55). ஆடுகளை வளர்த்து வரும் இவர், தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே நாச்சியார்புரம் வயல்வெளியில் ஆட்டுக்கிடை அமைத்து இருந்தார். கடந்த 4-ந்தேதி இரவில் அந்த ஆட்டுக்கிடைக்கு வந்த பக்கத்து ஊரான நெட்டூரைச் சேர்ந்த சிலர் ஆடுகளை திருட முயன்றதாக கூறப்படுகிறது.

உடனே கண்விழித்த அய்யனார் தன்னுடைய உறவினரான கிடாரக்குளத்தைச் சேர்ந்த பட்டனுக்கு (51) செல்போனில் தகவல் தெரிவித்து அங்கு வரவழைத்தார். இதனால் அய்யனார் தரப்பினருக்கும், ஆடு திருட முயன்ற கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த நெட்டூரைச் சேர்ந்த சண்முகையா மகன் விஜய் என்ற முத்துபாண்டி (24) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த அவரது நண்பரான நெட்டூரைச் சேர்ந்த முருகன் மகன் பார்த்தீபனை (25) மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதேபோன்று அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த மற்றொரு தரப்பான பட்டன், அவருடைய மகன்கள் காளிராஜன் (24), உச்சிமாகாளி (22) ஆகிய 3 பேரையும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், இரு தரப்பைச் சேர்ந்த 12 பேர் மீதும் வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக பட்டன், அவருடைய மகன்கள் காளிராஜன், உச்சிமாகாளி, கயத்தாறு அருகே மேல இலந்தைகுளம் உலகம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கரன் மகன் செல்லத்துரை (37) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான பட்டன், காளிராஜன், உச்சிமாகாளி ஆகிய 3 பேருக்கும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory