» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிவகிரியில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 6:49:39 PM (IST)



சிவகிரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சிவகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக தமிழக அரசை கண்டித்து சத்துணவு அமைப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த் துறை ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவரும் மண்டல துணை வட்டாட்சியர் மைதீன்பட்டாணி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டசெயலாளர்  மாடசாமி  பேசினார்.  ஆர்பாட்டத்தில் துணை வட்டாட்சியர் சரவணன், வருவாய் ஆய்வாளர்கள் பாக்கியலட்சுமி, முத்துக்குமார்  மற்றும் உதவியாளர்கள்  ராஜசாத்தி, சுந்தரிவள்ளி, கொம்பையா, செல்வதுரைச்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory