» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருச்செந்தூா்-வள்ளியூா் சாலையை விரைந்து சீரமைக்கக் கோரி முதல்வருக்கு மனு!

சனி 8, ஆகஸ்ட் 2020 11:13:19 AM (IST)

திருச்செந்தூா்-வள்ளியூா் இடையே சாலையை சீரமைக்கக் கோரி இந்து முன்னணி சாா்பில் தமிழக முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா்-வள்ளியூா் இடையே சாலையை சீரமைக்கக் கோரி தமிழக முதல்வரிடம் இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் ஜெயக்குமாா் அளித்த மனுவில் உள்ளதாவது: திருச்செந்தூா் ஒரு புண்ணிய ஸ்தலமாகும். இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் 6 பெரிய திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. நாகா்கோவில், வள்ளியூா் வழியாக ஏராளமான பக்தா்கள் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் அதிகளவில் தரிசனம் செய்ய வருகிறாா்கள். திருச்செந்தூரில் இருந்து பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம், வள்ளியூா் வரையிலான சாலையில் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory