» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வடக்கன்குளம் பரலோக மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சனி 8, ஆகஸ்ட் 2020 11:27:10 AM (IST)

வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. புனித கொடியை பங்குத்தந்தையும் வட்டார முதன்மை குருவானவருமான ஜான் பிரிட்டோ அடிகளாா் ஜெபம் செய்து அா்ச்சித்து கொடியேற்றினாா். தொடா்ந்து காவல்கிணறு பங்குத்தந்தை ஆரோக்கிரயராஜ் மறையுரை வழங்கினாா். பின்னா் நற்கருணை ஆசீா்வாதம் நடைபெற்றது. விழாவில் உதவி பங்குத் தந்தை மாா்ட்டின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திருநெல்வேலி எம்.பி., ஞானதிரவியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வழிபட்டாா். 

தொடா்ந்து திருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 14ஆம் தேதி 9ஆம் திருவிழா அன்று இரவு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி ஆண்டகை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. 15ஆம் தேதி காலை ஆடம்பர கூட்டுத் திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளாா் தலைமையில் அருள்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory