» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு : நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 43,287 பேர் தேர்ச்சி!

திங்கள் 10, ஆகஸ்ட் 2020 11:12:37 AM (IST)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பத்தாம் வகுப்பு தேர்வில் 43 ஆயிரத்து 287 மாணவ மாணவியருக்கு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. 

கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெறுவதாக இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. அசாதாரண சூழல் நிலவியதை தொடர்ந்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத இருந்த மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், வருகைப்பதிவேட்டின் அடிப்படையிலும் மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 100% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தேர்வு எழுதிய 43 ஆயிரத்து 287 மாணவ மாணவியரும் தேர்ச்சி பெற்றதாக மாவட்ட முதன்மை கல்வி உதவி தலைவர் அறிவித்துள்ளார். இதில் 21,672 மாணவர்கள் மற்றும் 21,615 மாணவியர்கள் ஆவர்.

தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் சென்று தங்களுடைய மதிப்பெண் விவரங்களை உள்ளிட்டு, தெரிந்துக்கொள்ளலாம். மேலும் மாணவர்கள் தங்களுடைய உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவு எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. அதில் பார்த்தும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை இன்று காலை 10 மணியில் இருந்து பதிவிறக்கம் செய்து, வைத்துக்கொள்ள அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வருகிற 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை செய்துவருகிறது. மதிப்பெண் சார்ந்த குறை இருப்பின் ஆக.17 முதல் 25ந்தேதி வரை www.dge.tn.gov.in-ல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory