» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சொத்திற்காக தந்தை ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை! மகன் கைது!!

திங்கள் 10, ஆகஸ்ட் 2020 11:14:35 AM (IST)

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே சொத்துத்தகராறில் பெற்ற தந்தையை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். 

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள செங்குளத்தைச் சேர்ந்தவர் கணபதி, விவசாயி. இவரது மகன் ராமமூர்த்தி. இவர் குடும்பச் சொத்தை பிரித்து கொடுக்க வலியுறுத்தி அடிக்கடி தந்தை கணபதியிடம் தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை – மகன் இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.  கடந்த வாரம் தந்தை வீட்டிற்கு சென்ற ராமமூர்த்தி சொத்தை பிரித்து தரவேண்டும் என்று கூறி தகராறு செய்துள்ளார். தகராறு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். 

இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர்  இருவரையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தினர் . இந்நிலையில் தந்தையின் மீது கடும் கோபத்தில் ராமமூர்த்தி  இருந்துள்ளார். இதனிடையே சம்பவத்தன்று கணபதி வீட்டில் இருந்து பைக்கில் மூன்றடைப்பில் உள்ள கடைக்கு  சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மகன் ராமமூர்த்தி அவரை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனால் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள பைக்கைப் போட்டுவிட்டு கணபதி ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அவரை விடாது ஓட ஓட விரட்டிச்சென்று  தந்தை என்றும் பாராமல் சரமாரியாக அரிவாளல் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டார். 

இதுகுறித்து தகவலறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து செய்து, ஊருக்குள் பதிங்கியிருந்த மகன் ராமமூர்த்தியை கைதுசெய்து, அரிவாள் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory