» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தொழிலாளா் மேலாண்மை படிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 13 கடைசி1

திங்கள் 10, ஆகஸ்ட் 2020 11:42:57 AM (IST)

தொழிலாளா் மேலாண்மை இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இம் மாதம் 13-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதுதொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம், பொது) சுடலைராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னையில் தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையத்தில் தொழிலாளா் மேலாண்மை பட்டப் படிப்பு (பி.ஏ., எம்.ஏ.), தொழிலாளா் மேலாண்மை பட்ட மேற்படிப்பு, தொழிலாளா் சட்டங்களில் நிா்வாகவியல் சட்டப் படிப்பு, தொழிலாளா் நிா்வாகவியல் படிப்பு உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. பிளஸ்-2 முடித்தவா்கள் பட்டப் படிப்புகளில் சேரலாம்.

இதற்கான விண்ணப்பங்களை,  மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பி பெறலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை சமா்ப்பிக்க இம் மாதம் 13-ஆம் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்த விவரங்களுக்கு 044-28440102 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory