» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வாகனம் மோதி விபத்து : தனியார் ஒப்பந்த டிரைவர் பலி!

திங்கள் 10, ஆகஸ்ட் 2020 5:40:24 PM (IST)

தென்காசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி நகராட்சி ஒப்பந்த டிரைவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

கடையநல்லூர் புன்னையாபுரம் தெற்குத் தெருவை சேர்ந்த பலவேசமுத்து மகன் அருண் குமார் (27). தென்காசி நகராட்சியில் தனியார் ஒப்பந்த டிரைவராக வேலை பார்த்து வந்த இவர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புன்னையாபுரத்தில் இருந்து தென்காசிக்கு தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார். கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் இசக்கி அம்மன் கோயில் அருகே வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரது பைக் மீது மோதியது. இதில் அருண் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து விரைந்து வந்த கடையநல்லூர் போலீசார், உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory