» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மனைவி பிரிந்த சோகம் : விவசாயி விஷம் குடித்து தற்கொலை!

திங்கள் 10, ஆகஸ்ட் 2020 6:01:05 PM (IST)

குருவிகுளம் அருகே மனைவி, குழந்தைகளை பிரிந்த மனஉளைச்சலில் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள நாலுவரசன்கோட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் மாணிக்கமுத்து (35). விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள் (33). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு முன் மாரியம்மாள் தனது குழந்தைகளுடன் புளியங்குடி முள்ளிக்குளம் அருகே நகரத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த மாணிக்கமுத்து வீட்டு அருகில் உள்ள தனது தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணிக்கமுத்து இறந்தார். இதுகுறித்து குருவிகுளம் எஸ்ஐ தர்மராஜ் விசாரணை நடத்தி வருகிறார்,



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory