» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு கூட்டம்

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2020 11:16:19 AM (IST)திருநெல்வேலி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடுதல் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 15.08.2020 அன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுவது தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது : திருநெல்வேலி மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 15.08.2020 அன்று சுதந்திர தின விழா பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. விழாவின் போது தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும். விழாவிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதிகளையும், தற்காலிக கழிப்பறை வசதிகளையும் மாநகராட்சி மூலம் செய்திட வேண்டும். அணிவகுப்பு மரியாதை தொடர்பான பயிற்சிகளை காவல் துறையினர் செய்திட வேண்டும். 

சுதந்திரப் போராட்ட தியாகிகளை கௌரவித்து, மரியாதை செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்திட முதன்மை கல்வி அலுவலர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 15.08.2020 அன்று சுதந்திர தின விழா கொண்டாடிட துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை செய்து, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், திருநெல்வேலி கோட்டாச்சியர் மணிஷ் நாரணவரே, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரத்தீக் தயாள், மாநகர காவல் துணை ஆணையாளர் (சட்டம் ஒழுங்கு) சரவணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், உட்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory