» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டாஸ்மாக் சூப்பர்வைசர் வெட்டிக்கொலை : மர்மநபர்கள் வெறிச்செயல்!

புதன் 12, ஆகஸ்ட் 2020 5:34:29 PM (IST)

சுரண்டை அருகே டாஸ்மாக் சூப்பர்வைசர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

சுரண்டை அருகே சாம்பவர்வடகரை, அக்கிரகாரத்தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டியன் (31). இவர் ஊர்மேலழகியான் என்ற ஊரில் டாஸ்மாக்கடை சூப்பர்வைசராக இருந்தார். இவரது மனைவி உஷா (41) இவர்களுக்கு விஷ்வா (14), வினிஸ் (12) என்ற இரு குழந்தைகள் உள்ளது. தற்போது ஊரடங்கு இருப்பதால் மனைவி மற்றும் குழந்தைகள் முத்துப்பாண்டியனின் சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே உள்ள வேட்டங்குளத்திற்கு சென்று விட்டனர். முத்துப்பாண்டியன் மட்டும் சாம்பவர்வடகரை வீட்டில் தங்கி டாஸ்மாக் சூப்பர்வைசர் வேலைக்கு சென்று வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முத்துப் பாண்டியனை 3 மர்ம நபர்கள் கழுத்தை துண்டால் இறுக்கியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துள்ளனர். இன்று காலை வீட்டு திறந்து கிடப்பதை பார்த்து உள்ளே சென்ற அக்கம்பக்கத்தினர் அங்கு முத்துப்பாண்டியன் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சாம்பார்வடகரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் முத்துப்பாண்டியனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory