» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு சார்ந்தோர் சான்று பெற விண்ணப்பிக்கலாம் :ஆட்சியர் அழைப்பு

புதன் 12, ஆகஸ்ட் 2020 5:59:38 PM (IST)

முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு சார்ந்தோர் சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என நெல்லை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு : பள்ளி மேல்நிலை கல்வி முடித்து 2020-21–ஆம் கல்வியாண்டில் கலை, அறிவியல், பொறியியல், விவசாய, கால்நடை மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு முன்னாள் படைவீரர்களின் சிறார் என்ற அடிப்படையில் இடஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேர முன்னாள் படைவீரர்களுக்கு ஆண்டுதோறும் சார்ந்தோர் சான்று வழங்கப்பட்டு வருகிறது. சார்ந்தோர் சான்று பெறுவதற்கு e.gov-ல் முன்னாள் படைவீரர்களின் விவரத்தினை Validation செய்திருக்க வேண்டும்.  

மேலும் படைவிலகல் சான்று, கல்விசான்று மதிப்பெண் பட்டியல், மற்றும் சாதிசான்று, கல்லூரி விண்ணப்பப் படிவம் ஆகிய ஆவணங்களுடன் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி பயன் பெறுமாறும், கோவிட்-19 ஊரடங்கு அமலில் உள்ளதால் நேரில் வர இயலாதவர்கள் முன்னாள் படைவீரர் நல அலுவலக தொலைபேசி : 0462-2901440 எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் மேலும் https::esmwel.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory