» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

படிக்கட்டில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி!

புதன் 12, ஆகஸ்ட் 2020 6:08:51 PM (IST)

கூடங்குளம் அருகே படிக்கட்டில் தவறி விழுந்து ஒன்றரை வயது பெண்குழந்தை உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்தவர் ராஜேஷ், பல்லடத்தில் தங்கியிருந்து மளிகைகடை நடத்தி வருகிறார். இதனால் இவரது மனைவி, ஒன்றரை வயது பெண் குழந்தையான அக்சயஸ்ரீயுடன் கூடங்குளம் அருகேயுள்ள கூத்தங்குளியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று வீட்டில் இருந்த அக்சயஸ்ரீ படிக்கட்டில் விளையாடிய போது எதிர்பாராத விதமாக தவறி கிழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. தகவலறிந்து விரைந்து சென்ற கூடங்குளம் போலீசார், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இதுகுறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory