» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மீன்வளர்ப்பு சார்ந்த விவசாயிகள் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அழைப்பு

புதன் 12, ஆகஸ்ட் 2020 7:12:57 PM (IST)

மீன்வளத்துறை சார்ந்த விவசாயிகள் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு மத்திய அமைச்சகம் மீன்வளத்துறை சார்ந்த விவசாய பெருமக்களுக்கு உள்ளீட்டு மூலதனத்திற்கான நிதியுதவி வழங்கிட ஏதுவாக வங்கியின் மூலமாக கடன் உதவி பெற்றிட விவசாய கடன் அட்டை (KCC) வழங்கும் திட்டத்தினை  செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சொந்தமாக மீன்பண்ணை மற்றும் குளங்கள் வைத்திருப்போர், பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்து நீர்நிலைகளை குத்தகை எடுத்து மீன்வள பணி மேற்கொள்பவர், மீன்குஞ்சு பொரிப்பகம் மற்றும் மீன் வளர்ப்பு பண்ணைகள், மீன் விதைப்பண்ணைகள் மற்றும் மீன் விற்பனை செய்வோர் வண்ண மீன் வளர்ப்போர் மற்றும் மீன் பதனிடும் தொழில் புரிவோர் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் மீன்வளர்ப்போருக்கு உள்ளீட்டு மூலதனமாக மீன்குஞ்சுகள், மீன் உணவு இயற்கை மற்றும் செயற்கை உரங்கள், மீன் அறுவடை மற்றும் விற்பனை செய்தல், குத்தகை தொகை போன்றவற்றுக்கு கடன் பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியான பயனாளிகள் மீன்துறை உதவி இயக்குநர் திருநெல்வேலி அலுவலகத்தை அலுவலக நாட்களில் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் பெற்றிட கீழ்காணும் முகவரியிலுள்ள மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அலுவலக முகவரி : 
மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 
42 ஊஇ 26வது குறுக்கு தெரு, 
மகாராஜா நகர், 
திருநெல்வேலி -627 011.
தொலைபேசி எண்: 0462 258 1488 
கைப்பேசி எண் : 9384824280                     
                                  மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory