» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் நாளை சுதந்திர தின விழா : முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு தடை ‍ ‍- பாதுகாப்பு தீவிரம்!

வெள்ளி 14, ஆகஸ்ட் 2020 12:53:08 PM (IST)

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா ஊரடங்கு அமலில் இருந்த போதிலும், சுதந்திர தினத்தை எளிமையாக கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில், பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நாளை (ஆக.15) நடைபெறுகிறது. அங்கு காலை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

இந்த விழாவில் முதியோர் மற்றும் குழந்தைகள் பங்கேற்க அனுமதி இல்லை. விழாவில் அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதையொட்டி வ.உ.சி. மைதானம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வ.உ.சி. மைதானத்தில் மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் அமரும் கேலரி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதே நேரத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.

வ.உ.சி. மைதானத்தில் உள்ளே, வெளியே என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு வெடிகுண்டு கண்டறியும் தானியங்கி மெட்டல் டிடெக்டர் நுழைவுவாயில் அமைத்து, அதன் வழியாக மட்டுமே பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

சுதந்திர தின விழாவில் பங்கேற்போர் முக கவசம் அணிவது கட்டாயம் ஆகும். இதற்காக மூவர்ண தேசியக்கொடி போன்றும், இந்திய நாட்டின் வரைபடம் போன்றும் முக கவசங்கள் தயார் செய்து விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை வியாபாரிகள் ஆங்காங்கே சாலையோரத்தில் குவித்தும், கயிற்றில் வரிசையாக கட்டி தொங்க விட்டும், விற்பனை செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory