» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கிணற்றில் விழுந்த மான் குட்டி : வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்!

வெள்ளி 14, ஆகஸ்ட் 2020 5:30:24 PM (IST)தென்காசி மாவட்டம் கடையம் அருகே தெற்கு மடத்தூர் கிராமத்தில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்த சுமார் ஒன்றரை வயது பெண் மான் குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள  செல்லத் தாயார்புரத்தைச் சேர்ந்த ஆறுமுகம். இவருக்கு  சொந்தமான தோட்டம் தெற்கு மடத்தூர் கிராமத்தில் உள்ளது. தோட்டத்தில் கடலை பயிரிட்டுள்ளார். வழக்கம் போல்  ஆறுமுகம் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றபோது கிணற்றில் மான் குட்டி ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்துள்ளார்.  இதுகுறித்து உடனடியாக கடையம் வனத்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து வனச்சரகர் (பொ) பரத் உத்தரவின்பேரில் வனக்காப்பாளர் மணி, வனப் பாதுகாவலர்கள் ரமேஷ்,  மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த சுமார் ஒன்றரை வயது பெண் மான் குட்டியை பத்திரமாக மீட்டனர்.  மீட்கப்பட்ட மான் குட்டியை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று கால்நடை மருத்துவரிடம் பரிசோதித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory