» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மகளிர் குழுக்களுக்கு ரூ.1 லட்சம், கறவை மாடுகள் வாங்க ரூ.60,000 கடனுதவி : ஆட்சியர் அறிவிப்பு!

வெள்ளி 14, ஆகஸ்ட் 2020 5:45:19 PM (IST)

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் மற்றும் அதற்குத் தேவையான தகுதிகள் குறித்த செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது, : தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களின் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில், சிறு தொழில் / வியாபாரம் செய்ய தனி நபர்களுக்கு பொது காலக்கடன், பெண்களுக்கு சிறுகடன், மகளிருக்கான புதிய பொற்காலகடன், ஆடவருக்கான சிறு கடன், கறவை மாட்டுக்கடன் போன்ற பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

கடன் கோருபவருக்கான தகுதிகள்
1.பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.
2.குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3.விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4.ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
5.பொதுகால கடன் திட்டம் மூலம் சிறுதொழில் ஃ வியாபாரம் செய்ய அதிகபட்சமாக தனி நபர் கடன் ரூ.15.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6% சதவிதத்திலிருந்து 8% வரை வசூலிக்கப்படுகிறது.
6.பெண்களுக்காக புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5%.
7.சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒவ்வொருக்கும் அதிகபட்சமாக ரூ.1,00,000 வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக 15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4%. சுயஉதவிக்குழு தொடங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
8.சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ. 1,00,000 வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்ச 15 லட்சம்  வரையும் கடன் வழங்கப்படுகிறது.    ஆண்டு வட்டி விகிதம் 5%.
9.கறவை மாடுகள் வாங்க ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30,000- வீதம் 2 கறவை மாடுகள் வாங்குவதற்கு ரூ.60,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6%.
10.வங்கி விதிகளின்படி கடன் தொகைக்கான பிணையம் தேவைப்படின் அளிக்கப்பட வேண்டும்.
11.அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். 
12.விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சாதி சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்) ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கோரும் ஆவணங்கள் ஆகியவற்றின் நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பலாம்.

1.திருநெல்வேலி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், 
கொக்கிரகுளம்,
பாளையங்கோட்டை-627 009 
திருநெல்வேலி 

2.மேலாண்மை இயக்குநர், திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 
எம்.ஜி.ஆர். மாளிகை, 
வண்ணார்பேட்டை, 
திருநெல்வேலி- 627 003

3.கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணை பதிவாளர், திருநெல்வேலி 
முகவரி எண் 1, மெய்ஞான தெரு, 
பாளையங்கோட்டை 

13.கீழ்க்கண்ட இடங்களில் கடன் கோரும் விண்ணப்பங்களை நேரடியாக சமர்ப்பிக்கலாம்.
1. அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள்
2. அனைத்து விவசாய கூட்டுறவு வங்கி கிளைகள்
3. அனைத்து நகர கூட்டுறவு வங்கி கிளைகள் 
4. அனைத்து அரசு இ-சேவை மையங்கள்.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory