» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மனைவியுடன் தகராறு : கணவன் விஷம் குடித்து தற்கொலை!

வெள்ளி 14, ஆகஸ்ட் 2020 6:12:01 PM (IST)

களக்காட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

களக்காடு மேல ரதவீதியைச் சேர்ந்த நடராஜன் மகன் ஐயப்பன் (35). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த ஐயப்பன் விஷம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதை அறிந்த மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை களக்காடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். தகவலறிந்த களக்காடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory