» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்தில் 17ம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை : ஆட்சியர் தகவல்

வெள்ளி 14, ஆகஸ்ட் 2020 7:35:58 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் வரும் 17ம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்குகிறது என மாவட்ட ஆட்சிaர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:2020-21 ம் கல்வி ஆண்டில் பள்ளிகளில் சேர்க்கை தொடர்பாக, தமிழக முதல்வரால் 11.08.2020 நாளிட்ட செய்திக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் அனைத்து வகைப் பள்ளிகளில் எல்.கே.ஜி.,1-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்புகளில் 17.08.2020 திங்கட்கிழமை அன்று முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஒரு பள்ளியிலிருந்து வேறொரு பள்ளிக்கு மாறுவதன் காரணமாக பிற வகுப்புகளில் (2-ம் வகுப்பு -10ம் வகுப்பு) சேரும் மாணவர்களுக்கான சேர்க்கையும் 17.08.2020 முதல் நடைபெறும். அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை 24.08.2020 திங்கட்கிழமை அன்று முதல் நடைபெறும்.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளன்றே அரசு/அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகம்,விலையில்லா நோட்டுப் புத்தகம், விலையில்லா புத்தகப் பை மற்றும் விலையில்லா சீருடை வழங்கப்படும். மேலும் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வீட்டுப்பள்ளி கல்வி மூலம் அரசின் கல்வித் தொலைக்காட்சி மற்றும் பிற தனியார் தொலைக்காட்சி வழி கற்பித்தல் நிகழ்ச்சி 03.08.2020 முதல் நடைபெறுகிறது. இதனையும் பெற்றோர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட செயல்பாடுகளின்போது கோவிட்-19 தொற்று ஏற்படாதவாறு, தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பள்ளிகளில் பின்பற்றப்படும்.மேலும் இலவச கட்டாய உரிமைச் சட்டம்-2009ன் படி தனியார் பள்ளிகளில் துவக்க நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கை செய்திட இணைய தள சேவை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். பெற்றோர்கள் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கை செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory