» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தமிழக மாணவர்களின் வாய்ப்பு பறிப்பு : திமுக எம்.எல்.ஏ.கீதாஜீவன் பேச்சு

ஞாயிறு 13, செப்டம்பர் 2020 7:30:30 PM (IST)

புதிய கல்வி கொள்கையினால் தமிழக மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்படும் சூழ்நிலை உள்ளதாகவும், கல்லூரியில் உள்ள இடங்களுக்கு வட இந்தியாவை சேர்ந்தவர்கள் போட்டிக்கு வரும் நிலை ஏற்படும் என்று திமுக மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏவுமான கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பாண்டவர்மங்கலத்தில் திமுக கிளையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான தொடக்க பணிகள் இன்று நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்.எல்.ஏவுமான கீதாஜீவன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பேசுகையில் 2021ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பு ஏற்பார். 

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை, ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களின் வீட்டு கஜனாவை நிரப்பும் வேலை தான் செய்கின்றனர். எதிர்கட்சியாக இருந்தாலும், மு.க.ஸ்டாலின் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றி வருகிறார். பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பற்றி தோலுரித்து காட்டி, அவர்கள் செய்வது தவறு என்று சுட்டி காட்டும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான். நீட் தேர்வு பயத்தில் ஒரு நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

புதிய கல்வி கொள்கையில் பாலிடெக்னிக், கலைக் கல்லூரிக்கும் நுழைவுத்தேர்வு என்று கூறப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு அகில இந்திய நுழைவுத்தேர்வு வைக்கும் போது நமது மாணவர்களுடன், வட இந்தியாயை சேர்ந்தவர்களும் பங்கிற்கு (போட்டிக்கு) வரும் நிலை உருவாகும், 10 ஆயிரம் இடங்கள் இருந்தால் 5 ஆயிரம் இடங்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளது. நம்முடைய குழந்தைகளின் வாய்ப்பு பறிக்கப்படுகிறது. இது போன்ற பிரதமர் எடுக்கும் முடிவுக்கு தமிழக முதல்வர் தலையாட்டி வருகிறார். நீட் தேர்வில் இடஒதுக்கீடு இல்லாத  காரணத்தினால் நமது உரிமையும் பறிபோகிறது. இன்னும் மாதத்தில் தமிழகத்திற்கு விடிவு காலம் என்றும், கருணாநிதியின் பொற்கால ஆட்சியை மு.க.ஸ்டாலின் அமைப்பார் என்றார்.


மக்கள் கருத்து

kumarSep 13, 2020 - 08:17:00 PM | Posted IP 162.1*****

Madam on the basis of what evidence you are telling north indian students will get 5000 seats from Tamilnadu colleges due to NEP? can you please explain in detail?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

திங்கள் 21, செப்டம்பர் 2020 6:02:53 PM (IST)

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory