» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் வாலிபர் வெட்டிக் கொலை: 6 பேர் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

திங்கள் 14, செப்டம்பர் 2020 8:23:57 AM (IST)

தூத்துக்குடியில் நேற்றிரவு வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜோசப் மகன் கபில்தேவ் (27). முத்தையாபுரம், சுந்தர் நகரைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் சாம்சன் (23) இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று இரவு தூத்துக்குடி பஜாரில் உள்ள ஜவுளி கடைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த சாம்சனின் நண்பர் தாளமுத்து நகரைச் சேர்ந்த ராஜவேல் என்கிற இஸ்ரவேல் (19) என்பருக்கும் கபில்தேவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து கடையில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு சாம்சனுக்கு போன் செய்து, கபில்தேவை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு வரவழைத்துள்ளனர். அப்போது கபில்தேவை, ராஜவேல் உள்ளிட்ட  6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. இதில் சாம்சன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தகவலறிந்து தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி கணேஷ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கபில்தேவ் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜவேல் உட்பட 6பேர் கும்பலை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


மக்கள் கருத்து

karuppanJun 6, 1600 - 06:30:00 PM | Posted IP 162.1*****

Don't say friends. Friends give thier own life.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

திங்கள் 21, செப்டம்பர் 2020 6:02:53 PM (IST)

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory