» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஏப்ரல் பருவத் தேர்வு 2020 : இணைய வழி நடத்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., திட்டம்

செவ்வாய் 15, செப்டம்பர் 2020 12:30:24 PM (IST)

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இணைவு / அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில் ஏப்ரல் 2020 பருவத் தேர்வை மட்டும் மாற்று வழியாக இணைய தளம் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இணைவு / அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில் முதுநிலை (P.G.), இளநிலை (U.G.), மற்றும் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) இறுதிப்பருவ தேர்வுகளை, கோவிட்-19 நோய் தொற்று காரணமாக குறித்த நேரத்தில், வழக்கம் போல நடத்த இயலாத காரணத்தினால், மத்திய, மாநில அரசு மற்றும் தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி, ஏப்ரல் 2020 பருவத் தேர்வை மட்டும் மாற்று வழியாக இணைய தளம் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இணையவழித் தேர்வுக்கான வழிமுறைகள் :
ஏப்ரல் 2020-ம் ஆண்டிற்கான இறுதிப்பருவத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணாக்கர்கள் (நடப்பு மற்றும் தனித்தேர்வர்கள் - Regular & Private) தங்களின் இருப்பிடத்திலிருந்தே தேர்வு எழுதிக் கொள்ளலாம். முதுநிலை (P.G.) மற்றும் இளநிலை அறிவியல், கணினி பயன்பாட்டியல் (B.Sc., B.C.A.,), ஆய்வியல் நிறைஞர் (M.Phil) மாணாக்கர்களுக்கு, காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், இளநிலை கலை, வணிக செயலாட்சியியல் (B.A., B.B.A.,) மற்றும் இளநிலை வணிகவியல் (B.Com.,) மாணாக்கர்களுக்கு பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும் தேர்வு நடைபெறும். 

மாணாக்கர்கள் வீட்டிலிருந்தபடியே தேர்வு எழுத ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக வினாத் தாளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு எழுதி முடித்த பின் குறித்த நேரத்திற்குள் விடைத்தாளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வினாத்தாள் மற்றும் பிற படிவங்களின் பதிவிறக்கம் , விடைத்தாள் பதிவேற்றம் ஆகியவற்றிற்கு மட்டும் இணையதள வசதியுள்ள Desktop / மடிக்கணினி / அலைபேசி வசதியை உபயோகித்தால் போதுமானது.

ஏப்ரல் 2020-ம் ஆண்டிற்க்கான தேர்வுக்கு விண்ணப்பித்த மாணாக்கர்கள் கட்டாயமாக பல்லைக்கழக இணைய தளம் (University Portal) மூலமாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்பவர்கள் கையெழுத்திட்டு உள்ளே செல்ல ஒருமுறை பயன்படுத்தும் கடவுச் சொல் (OTP) எண் அவர்களின் அலைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும். அலைபேசி எண்ணில் மாற்றம் இருந்தால் அந்தந்த கல்லூரியை அணுகி சரியான எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

இணையவழித் தேர்வுக்கான மாதிரித் தேர்வுகள் (Mock test) செப்டம்பர் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் - இத்தகைய மாதிரித் தேர்வின் மூலமாக மாணாக்கர்கள் தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு திறம்பட தேர்வு எழுத இயலும்.

தேர்வு நேரத்திற்கு முன்பாக கொடுக்கப்பட்டுள்ள 30 நிமிடத்திற்குள் தேர்வு பதிவெண்ணைக் கொண்டு இணைய தளத்திலிருந்து வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் சிரமம் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில், தாங்கள் பயிலும் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொண்டு, மின்னஞ்சல் / செய்தி பரிமாற்ற செயலி மூலம் வினாத் தாளை பெற்றுக் கொள்ளலாம்.

மாணாக்கர் கருப்பு நிறம் / ஊதா நிறத்திலான மையையே பயன்படுத்தி தேர்வு எழுத வேண்டும்.

மாணாக்கர்கள் விடைத் தாள்களை ஸ்கேன் (Scan) செய்து, பக்க எண் வரிசையில் சரிபார்த்து பி.டீ.எஃப். (Pdf) வடிவில் பல்கலைக்கழக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்குரிய ஒப்புதல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

பதிவேற்றம் செய்ய இயலாத , இணைய தள வசதி குறைந்த பகுதியில் உள்ள மாணாக்கர்கள் மட்டும் விடைத்தாள்களை உறையில் இட்டு தங்களது கல்லூரியில் சமர்ப்பித்து ஒப்புகைச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

மிக முக்கியமாக அனைத்து தேர்வுகளும் முடிந்த பின்னர் , மாணாக்கர் தாங்கள் பதிவேற்றம் செய்த அனைத்து விடைத்தாள்களையும் (Hard copy) ஒரே உறையிலிட்டு , துரித தபால் (Speed Post) / கூரியர் (Courier Post) மூலமாக , தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் , திருநெல்வேலி - 627 012 , தொலை பேசி எண். 0462-25636121 என்ற முகவரிக்கு அக்டோபர் 3-ம் தேதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.

எந்த சூழலிலும் மாணாக்கர்கள் தங்கள் கைவசம் விடைத்தாள்களை வைத்திருக்கக் கூடாது. மேலும் விவரங்களுக்கு Phone: 0462-2333741 Mobile: 9487999687 எண்ணை தாெடர்பு காெள்ளலாம்.இவ்வாறு பல்கலைகழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

திங்கள் 21, செப்டம்பர் 2020 6:02:53 PM (IST)

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory