» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கொரோனா தடுப்பு பணி : சுரண்டையில் மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு

செவ்வாய் 15, செப்டம்பர் 2020 6:50:33 PM (IST)சுரண்டையில் கொரோனா தடுப்பு மற்றும் டெங்கு தடுப்பு பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் கொரோனா தடுப்பு மற்றும் டெங்கு தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு மேற்கொண்டார். சுரண்டை பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்ட் ரோடு, அரண்மனை தெரு, கோட்டை தெரு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர் முக கவசம் இல்லாமலும் சமூக இடைவெளி கடைபிடித்தல், போன்றவை குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். 

அவருடன் வீகே புதூர் தாசில்தார் முருகு செல்வி, ஆர்ஜ மாரியப்பன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்தி, மருத்துவ அலுவலர்கள் செந்தில் குமார், ஹசீனா பானு, வட்டார சுகாதார அலுவலர் இசக்கியப்பா, சுகாதார அலுவலர்கள் பாலு, ராஜேந்திரகுமார், கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி மன்ற நிர்வாக அதிகாரி அரசப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து குறுவட்ட நில அளவையருக்கான குடியிருப்பு கட்டடம், தீயணைப்புத்துறை ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டடம், துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கிட்டங்கி கட்டடம் ஆகியவை கட்ட பரிந்துரைக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

திங்கள் 21, செப்டம்பர் 2020 6:02:53 PM (IST)

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory