» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர் நலத்திட்ட உதவிகள் பெற சிறப்பு ஏற்பாடுகள் : ஆட்சியர் தகவல்

புதன் 16, செப்டம்பர் 2020 10:39:36 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் எச்.ஐ.வி.நோயாளிகள் அரசின் உதவித்தொகை பெறுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஷில்பா தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இருகுறித்து மாவட்ட ஆட்சியரின் செய்தி குறிப்பு : திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்கள் / பெண்கள்/ முதியோர் / விதவை மற்றும் பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு, சமூக பாதுகாப்புத் திட்டங்கள் வழியாக குடும்ப அட்டை, ஆதார் அட்டை, தமிழக முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டம், விதவை உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, உழவர் பாதுகாப்புத் திட்டம், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் அட்டை, இலவச நில பட்டா, மாற்றுத் திறனாளிகளுக்கான அட்டை மற்றும் தமிழ்நாடு அரசின் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வலைதளத்தில் பதிவு செய்தல் போன்றவற்றில் நலத் திட்ட உதவிகள் முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வரும் நம்பிக்கை மையங்களில் பணிபுரியும் ஆலோசகர்கள் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஏஆர்டி மையத்தில் தங்களுக்கு தேவையான திட்டங்களுக்கு விண்ணப்பங்களையும், ஆதார சான்றிதழ்களையும் வழங்கி பயன்பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

திங்கள் 21, செப்டம்பர் 2020 6:02:53 PM (IST)

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory