» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வாட்ஸ் அப், இ-மெயில் மூலம் மக்கள் குறைதீர்க்கும் மனுக்களை அனுப்பலாம் : தென்காசி ஆட்சியர்

புதன் 16, செப்டம்பர் 2020 1:03:37 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனுக்களை வாட்ஸ் அப், இ-மெயில் மூலம் அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வருவதை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்களின் குறைகளை தீர்க்க மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 9443620761 என்ற அலைபேசி எண்ணில் வாட்ஸ் அப் மூலமாகவும்,   collector.grievance@gmail.com என்ற இமெயில் மூலமாகவும் புகார் தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து கண்காணிக்க ஒவ்வொரு வட்டத்திற்கும் துணை ஆட்சியர் அளவிலான ஒரு அலுவலரை வட்டக்குறைதீர்க்கும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்காசிமாவட்டத்திலுள்ள பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை  https://gdp.tn.gov.in https://gdp.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கணிணி அல்லது அலைபேசி மூலம் தாங்களாகவோ அல்லது தங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள மின் ஆளுமை திட்டத்தின் கீழ் இயங்கிவரும்; பொது இ-சேவை மையங்களில் அதற்குரிய கட்டணமாக ரூ. 10- ஐ மட்டும் செலுத்தி குறைதீர்க்கும் நாள் மனுக்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். 

அவ்வாறு பெறப்படும் மனுக்கள் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் வட்டாட்சியர் அலுவலகத்தில் அந்த வட்டத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள பொறுப்புதுணை ஆட்சியாளர்களால் அனைத்து அலுவலர்களுடன் கலந்தாலோசித்து, பெறப்பட்ட மனுக்கள் உரிய முறையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

வட்டம் கண்காணிப்பு அலுவலர் அலைபேசிஎண்
1 ஆலங்குளம் உதவி ஆணையர் (கலால்) 9443620562
2 கடையநல்லூர் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) 9443620457
3 சங்கரன்கோவில் தனித்துணைஆட்சியர் (ச.பா.தி) 9443620712
4 செங்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், தென்காசி 9443620492

5 சிவகிரி மாவட்ட வழங்கல்  அலுவலர் 9443620387
6 தென்காசி வருவாய் கோட்டாட்சியர் (தென்காசி) 9443621726
7 திருவேங்கடம் வருவாய் கோட்டாட்சியர் (சங்கரன்கோவில்) 9443620356
8 வீரகேரளம்புதூர் மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் 9443620138


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

திங்கள் 21, செப்டம்பர் 2020 6:02:53 PM (IST)

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory