» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் வாலிபரிடம் வழிப்பறி : 3 பேர் கைது

புதன் 16, செப்டம்பர் 2020 5:25:48 PM (IST)நெல்லை ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் இன்ஜினியரை தாக்கி ஏடிஎம் கார்டு, பணம் பறித்ததுடன், ஒரு லட்ச ரூபாய் கேட்டு மிரட்டிய 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

நெல்லை பாளையங்கோட்டை சீனிவாசன் நகரைச் சேர்ந்தவர் சுரேந்தர் இன்ஜினியர் பட்டதாரியான இவர் வேலை தேடிவருகிறார். இவருக்கு கடந்த 9-ஆம் தேதி செல்போனுக்கு வந்த அழைப்பு ஒன்றில் பேசிய அந்தோணி என்பவர் உங்களுடன் கல்லூரியில் படித்த நண்பர் ஒருவர் என்னுடன் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை அருகே உங்களைப் பார்ப்பதற்காக காத்திருக்கிறார் உடனே வாருங்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த தகவலையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார் அங்கு 3 பேர் நின்றுள்ளனர். ஆனால் அதில் நண்பர் என யாரும் இல்லை இந்நிலையில் அங்கிருந்து புறப்பட முயற்சித்த சுரேந்திரனை,3 பேரும் தாக்கி மிரட்டி அவரிடம் இருந்து பணம் மற்றும் அவரது இரண்டு ஏடிஎம் கார்டுகளை பறித்ததோடு மேலும் அவரை செல்போனில் படம் எடுத்து வைத்து கொண்டுள்ளனர். 

2 நாளைக்குள் ஒரு லட்சம் பணம் தர வேண்டும் இல்லையெனில் போட்டோவை ஆபாச படங்களோடு சேர்த்து மார்பிங் செய்து வெளியிடுவோம் என மிரட்டி அனுப்பிவைத்துள்ளனர். இதுகுறித்து சுரேந்தர் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தததில் அவர்கள் செய்துங்கநல்லூர் அருகே உள்ள வல்லவன்குலத்தைச் சேர்ந்த அந்தோணி,  தாதன்குளத்தை சேர்ந்த வள்ளிநாயகம் மற்றும் கருங்குளத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரைணை நடத்தி சுரேந்திரன் செல்பொன் என் எப்படி தெரியும் என கேட்ட போது.  உத்தேசமாக டயல் செய்தோம் அதில் சுரேந்திரன் சிக்கியதாக தெரிவித்தனர். விசாரணைக்கு பிறகு 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நாங்குநேரி கிளை சிறையில் அடைத்தனர் மேலும் அவர்களிடம் இருந்து செல்போன், இரண்டு ஏடிஎம் கார்டுகள், ரூபாய் 700 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் சுற்றி பார்க்க சென்ற காதல் ஜோடியிடம் செல்போனில் படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே காவல் துறையினர் அங்கு மாலை வேளைகளில்  ரோந்து வாகனத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

திங்கள் 21, செப்டம்பர் 2020 6:02:53 PM (IST)

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory