» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்த காவலர் சஸ்பெண்ட் : மாவட்ட எஸ்.பி., அதிரடி

புதன் 16, செப்டம்பர் 2020 5:55:06 PM (IST)

மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்த காவலரை பணியிடை நீக்கம் செய்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவுப்படி தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மணல் திருட்டிற்கு உடந்தையாக காவல்துறை அதிகாரிகள் யாரும் செயல்பட்டால் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்கனவே எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய முதல் நிலை காவலர் லட்சுமி நாராயணன், மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு வந்ததால் உடனே அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுபோன்று மணல் கடத்தலுக்கு உதவியாக காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் செயல்பட்டால் பணியிடை நீக்கம் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

திங்கள் 21, செப்டம்பர் 2020 6:02:53 PM (IST)

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory