» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மற்ற நடிகர்களை விமர்சித்து சூர்யா ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்!!

புதன் 16, செப்டம்பர் 2020 7:31:50 PM (IST)நெல்லை மாநகர பகுதியில் நடிகர் சூர்யா ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வால் அரியலூர் மாணவி அனிதா தொடங்கி திருச்செங்கோட்டை சேர்ந்த மாணவன் மோதிலால் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே பரபரப்பிற்கு உள்ளாக்கியது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல்கொடுத்து வந்த நிலையில் நடிகர் சூரியா விடுத்த அறிக்கையில் நீட் தேர்வு போன்ற தேர்வுகள் மாணவர்கள் வாய்ப்பை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது என்பது போன்ற வாசகங்களுடன் கடுமையாக தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். 

இந்த சம்பவத்திற்கு பலகட்ட எதிர்ப்புகளும் ஆதரவுகளும் எழுந்து வந்த நிலையில் சில நடிகர்கள் கட்சி தொடங்கி கொடி அறிமுக செய்து முதல்வர் வேட்பாளர்களாக தேர்தல் களம் காண பணிகளை செய்து வரும் நிலையில், அதை விமர்சிக்கும் வகையில் சூர்யாவின் ரசிகர்கள் நெல்லை மாநகர் பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். 

மேலும் நீட் தேர்வுக்கு எதிராக குரல்கொடுத்ததை மையபடுத்தி தேர்தலுக்காகவும் முதல்வராகவேண்டும் என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டு குரல் கொடுப்பவர் சூர்யா அல்ல என்பதை போலவும், அநியாயம் என்று தெரிந்தால் குரல் கொடுப்பார் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது. 

அரசியலுக்கு வரவேண்டும், முதல்வராக வேண்டும் என பல்வேறு நடிகர்களின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டிவரும் நிலையில் அவர்களை விமர்சிக்கும் வகையில் நடிகர் சூர்யா ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

lingamSep 17, 2020 - 11:48:16 AM | Posted IP 108.1*****

true

ஆசீர். விSep 17, 2020 - 09:45:20 AM | Posted IP 173.2*****

this is the real one

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

திங்கள் 21, செப்டம்பர் 2020 6:02:53 PM (IST)

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory