» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விஸ்வநாதபுரத்தில் செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து மமக கண்டன ஆர்ப்பாட்டம்

சனி 19, செப்டம்பர் 2020 10:38:30 AM (IST)


 
செங்கோட்டை அருகேயுள்ள விஸ்வநாதபுரத்தில் செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து மமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

செங்கோட்டை அருகேயுள்ள விஸ்வநாதபுரம் புதுமனை தெருவில் மக்கள் அதிகம்  நிறைந்து வாழ்கின்ற இடத்தில் ஏர்டெல் டவர் அமைப்பதற்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதியை ரத்து செய்யக்கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் விஸ்வை அப்துல்காதர் தலைமை தாங்கினார். 

மாவட்ட செயலாளர் பசீர் ஒலி, மாவட்ட துணைத் தலைவர் அப்துல் ரகுமான், துணைச் செயலாளர்கள் புளியங்குடி மஜீத், கடையநல்லூர் பாசித் வீராணம் ஷாஜகான், பண்பொழி செய்யது அலி, செங்கோட்டை நகர செயலாளர் உமர் கத்தாப், தமுமுக செயலாளர் பிளாசா, ஒன்றிய செயலாளர் கட்ட மொழி மீரான், இளைஞரணி செயலாளர் ஜாபர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் மைதீன் சேட்கான், மாவட்டத் தலைவர் முகமது யாகூப், விசுவை கிளை தலைவர் ஜாகீர், மருத்துவ சேவை அணி மாவட்ட பொருளாளர் செங்கை சாதிக், ஊர் பொதுமக்கள் தேவசகாயம், சுப்பிரமணியன், கசமுத்து, மகாலட்சுமி, பெட்டி தாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory