» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுப்பிரமணியாபுரத்தில் அதிமுக இளைஞர் பாசறை கூட்டம்

சனி 19, செப்டம்பர் 2020 10:57:36 AM (IST)


  
சுப்பிரமணியாபுரத்தில் அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி சுப்பிரமணியாபுரத்தில் அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ., மனோகரன் தலைமை வகித்தார். அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் வேடசந்தூர் பரமசிவம் எம்எல்ஏ, அமைச்சர் ராஜலெட்சுமி, தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சவுக்கை வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ.,கள் துரையப்பா, முத்துசெல்வி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கண்ணன் (எ) ராஜ், இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட மகளிரணி செயலாளர் சொர்ணம், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் முருகையா பாண்டியன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் முருகராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory