» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குண்டர் தடுப்ப காவல் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது

சனி 19, செப்டம்பர் 2020 12:16:25 PM (IST)

சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 2 பேரை மானூர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மானூர் சேதுராயன்புதூர் கஸ்பா நடுத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மகாராஜன் (21), மற்றும் மூவிருந்தாளி வடக்கு தெருவைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் விஜயராஜ் (29), ஆகியோர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் இவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, மானூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமர் அறிவுறுத்தியதன் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து மகாராஜன், விஜயராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory