» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாரம்பரிய உணவுகளை குழந்தைகளுக்கு கொடுங்கள் : தாய்மார்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

திங்கள் 21, செப்டம்பர் 2020 5:41:02 PM (IST)


 
சத்தான பாரம்பரிய உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் நோய் எதிப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தாய்மார்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் எதிரில் சமுதாய நலக்கூடத்தில் வைத்து தேசிய ஊட்டச்சத்து மாத  விழாவில் பாரம்பரிய உணவுத் திருவிழா மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தேசிய அளவில் செப்டம்பர் மாதம் முழுவதும் போஸான் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எதிர் கால சமுதாயத்தை கட்டமைக்க தற்போது உள்ள குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க வேண்டும். ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களிலும கீரைகள், முருங்கைக்காய், பப்பாளி, நெல்லிக்காய் போன்ற சத்தான உணவு வகைகளை எளிதாக உருவாக்கக்கூடிய வீட்டுத்தோட்டத்தினை அமைத்திட அரசு திட்டம் வகுத்துள்ளது.

குழந்தைகளுக்கு காய்கறிகளை உணவில் சேர்த்து உண்ணும் பழக்கத்தினை பெற்றோர்கள் சிறுவயது முதலே குழந்தைகளுக்கு பழக்க வேண்டும். காலமுறை, காய்கறிகள் மற்றும் பழங்களை குழந்தைகளுக்கு கட்டாயம் வழங்க வேண்டும். குழந்தை கருவுற்றது முதல் 2 வயது வரை உள்ள 1000 நாட்கள் மிகவும் பொன்னான நேரம் ஆகும் இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கும் சத்தான உணவு மற்றும் பாரம்பரிய உணவுகளை கொடுப்பதன் மூலம் வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உடல் வளர்ச்சி மற்றும்; கல்வியில் சிறந்து விளங்ககூடிய நிலை ஏற்படும்.

குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் சத்தான மாவு வகைகள் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதனை மேலும் குழந்தைகளுக்கு கண்கவரும் விதமாக மாற்றி குழந்தைகளுக்கு வழங்குவதற்காக இந்த உணவு திருவிழா வழிவகை செய்யும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சத்தான மற்றும் பாரம்பரிய உணவு வகைகளை வழங்குவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி, தேவையான அளவு வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயசூர்யா, வட்டார மருத்துவர் அலுவலர் டாக்டர் கார்த்திகா, வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பார்த்தசாரதி, (கி.ஊ).திலகராஜ், உதவி பொறியாளர் சந்திரலேகா, மகளிர் திட்ட உதவி அலுவலர் முருகன் உட்பட மகளிர் திட்ட வட்டார மேலாளர்கள்; ஒருங்கிணைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், பொதுமக்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory